உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு மற்றும் உலகத் தமிழ் வர்த்தக சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் உலகத் தமிழர் திருவிழா அண்மையில் சென்னை ராயல் லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது. உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பு 28 நாடுகளை சார்ந்த தமிழ் பேசும் அரசியல், வர்த்தக மற்றும் கலைத்துறை சார் தமிழர்களை உள்ளடக்கிய அமைப்பாகும். இதன் கலைத்துறை ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் நானும் விழாவில் பங்குகொண்டேன் .
Wednesday, 11 January 2017
இசைப்புயலுடன் சில நிமிடங்கள்...
Labels:
Art & Artists,
events,
Meetings,
Music,
Peronalities
Friday, 18 July 2014
அம்மா நலமா? - குறும்படம்
யுத்தம், வன்முறை, இழப்பு, என்ற வார்த்தைகளைக் கேட்டவுடன் பொதுவாக நினைவுக்கு வருவது நம் நாட்டில் நடந்துமுடிந்த இனப்போர் தான். ஆனால் எனக்கு உலகம் முழுவதிலும் தினம் தினம் அரங்கேறும் அத்தனை அழிவுகள் பற்றியும் சிந்திக்கத்தோன்றும். இனம் சார்ந்து, மதம் சார்ந்து, நிலம் சார்ந்து என்று யோசிக்காம் மனிதம் சார்ந்து யோசித்தால் இந்தப் போர்கள் மனிதன் தன்னைத் தானே கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துக்கொள்ளும் ஒருவகைத் தற்கொலைத் தாக்குதல் தான்.
Monday, 2 June 2014
ராஜாவின் தென்றல் !
இசைஞானி இளையராஜா பற்றிய ஆயிரக்கணக்கான கட்டுரைகள் வெளியாகும் அவரது 71 ஆவது பிறந்த நாளான இன்று, அவரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு , ஆளப்பட்டுக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்குள் ஒருவனாகவும் அவரது இசையினால் ஈர்க்கப்பட்டு இசைக் கலைஞனான லட்சக்கணக்கானவர்களில் ஒருவனாகவும் , என் போன்ற இன்னும் சில ராஜா ரசிகர்களும் சேர்ந்து அவரது பாடல்களை வைத்து ஒரு படைப்பை உருவாக்கினோம்...
Saturday, 25 January 2014
'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்
24-01-2014 அன்று Metro News பத்திரிகையில் பிரசுரமான எனது கட்டுரை
பாடல்கள் கேட்பது பலருக்குப் பொழுதுபோக்கு, என் போன்றவர்களுக்கு அது தொழிலின் ஒரு அங்கம் என்று கூறலாம். அப்படியிருக்கையில் நான் ரசித்த பாடல் என்று ஒரே ஒரு பாடலை நினைவுக்குக்கொண்டு வருதல் போன்ற கடினமான விடயம் வேறில்லை. இருப்பினும் கண்ணை மூடி சிந்தித்த ஒரு கணத்தில் மனதில் உடனே தோன்றிய மிகப்பிடித்த பாடல்வரிசையில் ஒன்று 'அடி ராக்கம்மா கையத்தட்டு...'
Thursday, 26 September 2013
கடுப்பானார் கடவுள்....!!!
2004 ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி.. அமெரிக்காவின் Massachusetts உயர் நீதிமன்றத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் புரியலாம் என்று சரிச்சைக்குரிய தீர்ப்பொன்று வழங்கபடுகின்றது..... "கடவுளே உனக்கு கண்ணே இல்லையா இதெல்லாம் பார்த்துகிட்டு சும்மாவா இருக்க நீயி?" என்று செய்தி கேள்விப்பட்ட ஒரு கிழவி மேலே பார்த்து முழங்க.....
உண்மையிலேயே அன்று கடவுள் இமயமலைப் பக்கத்தில் கொஞ்சம் பிஸி ......
என்ன நடந்துச்சுன்னா........
Labels:
Social Media
Thursday, 30 May 2013
இன்னுமொரு வடிவில் 'மகுடி'
வியாழக்கிழமை, 30 மே 2013 22:34 - Tamilmirror.lk இல் பிரசுரமான என் கட்டுரை
நான் இசையமைக்கத் தொடங்கிய காலகட்டத்தில் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருந்த நம் நாட்டுப் பாடல்களில் ஒன்று 'நம்மூரு மறந்துபோயி பட்டணம் ஓடிப்போனா...' பாடலுக்கு சொந்தக்காரர்கள் டினேஷ் மற்றும் கஜன் ஆகியோர். அன்று தொடக்கம் நான் அவதானித்து வந்த டினேஷின் வளர்ச்சி பற்றியதான பகிர்வு இது.

Music
Friday, 22 February 2013
இசையை கற்பதை விட விற்கும் இளம் இசைக் கலைஞர்கள்: டிரோன் பெர்னாண்டோ
www.thuruvan.com இணையத்தளத்தில் வெளியான எனது நேர்காணலின் பிரதி.
நேர்கண்டவர் ராஜ் சுகா...
இலங்கையின் முன்னனி இசைக்கலைஞராக வலம்வரும் டிரோன் பெர்னாண்டோ கீபோர்ட் வாத்தியக் கலைஞராக அறிமுகமாகி தனக்கென்று இசைத்துறையில் ஆழமான ஓர் இடத்தினை செதுக்கிக்கொண்டிருக்கும் ஓர் துடிப்புள்ள கலைஞர். சினிமா சாராத இசைப்பயணத்தில் தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்த துடிக்கும் இவர் இசையமைப்பாளர், சவுன்ட் எஞ்சினியர், பாடலாசிரியர், பாடகர், வாத்தியக் கலைஞர், மொழிபெயர்ப்பாளர், குரல்பதிவுக் கலைஞர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என பல திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ளார். காலமாற்றத்துக்கும் ரசனை மாற்றத்துக்கும் ஏற்ப இலங்கையிலும் புரட்சிகளை செய்துகொண்டிருக்கும் டிரோனை துருவ நட்சத்திரம் பகுதிக்காக சந்தித்தபோது அவர் எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்கள் துருவம் வாசகர்களுக்காக...

Media Interviews
Subscribe to:
Comments (Atom)