"நீங்கள் உற்பத்தி செய்பவற்றை நீங்களே விற்பனை செய்ய முடிந்தாலன்றி தற்கால நவீன வியாபார உலகத்தில் தனித்தன்மையுள்ள சிந்தனையாளராக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை" -டேவிட் .எம். ஓகில்வி
இன்றுவரை எங்கள் படைப்புகளுக்கு களமில்லை, நல்ல காலமுமில்லை, விலை போகுதுமில்லை என்று குறை பட்டுக்கொள்ளும் நிறைய கலைஞர்களைப் பார்கின்றேன். ஊடகங்களில் எமது படைப்புகள் ஒலிபரப்ப படுவதுமில்லை என்பது இன்னுமொரு பிரபலமான குற்றச்சாட்டு.
பல நேர்காணல்களில் இது பற்றி நான் கதைத்ததுண்டு. சக கலைஞர்கள் மனம் நொந்து போடும் status message களுக்கு நான் கமெண்ட் ஆகவும் பதிந்த்துண்டு.