Wednesday 29 June 2011

ஒரு அஞ்சலி.... சில பாடங்கள்...

பிரபலம் என்னும் சொல்லுக்கு மிகச்சிறந்த உதாரணம் மைகேல் ஜாக்சன் என்னும் பெயர் தான்.. உலகம் முழுக்க எத்தனையோ கலைஞர்கள் வந்து போனால் கூட பட்டி தொட்டியெல்லாம் தெரிந்த ஒரே பெயர் இந்த மைகேல் ஜாக்சன். அவரது பாடலை கேட்காத அவரது நடனத்தை பார்த்திராத பல்லுப்போன ஒரு பாட்டிக்கு கூட அவரின் பெயர் நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படியானதொரு பிரபலம் வேறு யாருக்கு இருக்கின்றது?

கலைஞர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  பதிவு செய்யப்பட அவர்களின் படைப்புகள் இறவாத்தன்மை பெற்றுவிடுகின்றன. மலேசியா வாசுதேவன் இன்னும் பாடிகொண்டிருகின்றார்....கவிஞர் கண்ணதாசன் இன்னமும் கருடா சௌக்கியமா என்று நலம் விசாரித்துக் கொண்டிருக்கின்றார்.... மொத்தத்தில் நல்ல கலைஞருக்கு சாவில்லை..