Monday 12 November 2012

கலைகளும் ரசிகனும்....


ஒரு கலைஞனுக்கும் ரசிகனுக்குமுள்ள உறவு வரைமுறைக்கு அப்பாற்பட்டது. நான் விரும்பும் கலை உன்னிடம் உள்ளது , அதனால் உன்னை விரும்புகிறேன் என்ற நிலையிலுள்ள ரசிகன் அநேகமான நேரங்களில் உண்மையுள்ளவனாகவே இருக்கிறான். அந்த உண்மை விசுவாசமாக மாறி கலையை விட கலைஞனை நேசிக்க ஆரம்பிக்கும் போது அவன் ஏமாற்றங்களையும் சந்திக்க நேரலாம்.

கலைஞனுக்கூடாக கலை ஊற்றெடுத்து உலகை சென்றடைந்தாலும் கலையை களைந்து பார்த்தால் அவனும் மனிதனே. ஆயினும் கலைஞனை கடவுளாகப் பார்க்கும் கூட்டமும் அவனிலுள்ள மனிதனை மறந்துவிட்ட கூட்டமும் நிறைய நேரங்களில் கலைக்கு உண்மையாய் இருப்பதில்லை.

கலைஞனை கடவுளாகப் பார்க்கும் கூட்டம் அவன் என்ன செய்தாலும் அது கலை என்று கண்மூடி ஏற்றுகொள்கிறது. கலைஞனில் உள்ள மனிதனை மறக்கும் கூட்டம் அந்த மனிதன் விடும் தவறுகளுக்காக அவனின் கலையை தண்டித்து விடுகிறது.

உலகிற்கு எப்போதும் தேவை நல்ல கலைகளும் கலையை மட்டும் நேசிக்கும் ரசிகர்களுமே....

Tuesday 4 September 2012

மொசார்ட் வீட்டு ஆணாதிக்கம்!

செவ்விசையில் ஆர்வமுள்ளவர்களுக்கு அறிமுகம் தேவையில்லாத பெயர் மொசார்ட் (Mozart). அவரின் இசை சாதனைகள் இன்னனும் மேடைகளில் பேசப்பட்டும் இசைக்கப்பட்டும் அவரை வாழ வைத்துகொண்டிருகின்றது..

இந்த மொசார்ட் இசை கற்க ஆரம்பித்தது எப்படி என்று இவரது தந்தையார் ஒரு குறிப்பில் இப்படிச் சொல்கிறார்...' தன் சகோதரிக்கு நான் இடும் கட்டளைகளையும் அதனை ஏற்று  அவள் புரியும் இசைப் பயிற்சிகளையும் உன்னிப்பாக கவனித்து வந்த மொசார்ட்டுக்கும்  இசை அறிவு இயல்பாகவே வளர ஆரம்பித்தது"

மொசார்டுக்கே இசை அறிவு வளர தூண்டுகோலாய் இருந்த அவரின் சகோதரி என்ன ஆனார் ?

Saturday 7 July 2012

பகடைக் காய்களாகும் கலைஞர்கள்

(07-07-2012 அன்று tamilmirror.lk இல் பிரசுரமானது...)

அரசியல் பற்றிய நல்ல அபிப்பிராயம் மக்கள் மத்தியில் இல்லாமைக்கு முழுப்பொறுப்பும் அரசியல்வாதிகளே! அரசியல் பற்றி அடி - நுனி தெரியாத அடியேனுக்கு அரசியலால் பாதிக்கப்படும் கலைஞர்கள் பற்றியும் பேசும் தகுதி ஓரளவுக்கு இருக்கிறது.

மக்கள் விரும்பும் கலைஞர்களை சீண்டுவதன் மூலம் தமக்கான சுய விளம்பரத்தை இலகுவில் பெற்றுக்கொள்ள நினைக்கும் தமிழக அரசியல்வாதிகளின் தந்திரோபாயங்கள் நமக்குப் புதியதல்ல. இலங்கை இனப் பிரச்சினையும் தமிழக அரசியல்வாதிகளின் சுய விளம்பரத்துக்கு காலகாலமாக உதவி வருவது நாங்கள் அறிந்த ஒன்றே.

Sunday 11 March 2012

ஸ்ரீதர் பிச்சையப்பாவுடன் Generation Gap!

என்னை செதுக்கியவர்களில் மிக முக்கியமானவர் ஸ்ரீ அண்ணா என்று நாங்கள் அன்போடு அழைக்கும் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்கள். சில மரணங்களை மனது கடைசிவரை ஏற்றுக்கொள்ளப் போராடும். ஸ்ரீ அண்ணாவின் மரணமும் இன்னும் அப்படித்தான். அவரது இரண்டாவது நினைவு நாளும் கடந்துவிட்டது. நினைவுகள் மட்டும் இன்னும் அதே பசுமையுடன்..

Thursday 19 January 2012

தகவல்கள் ஜாக்கிரதை!

ஊடகங்களில்  முதன்மையானதாக இணையம்  மாறி விட்டது.. பார்த்தல் கேட்டல் படித்தல் ஒளி ஒலி என்று என்னென வடிவங்களில் மக்களை சென்றடைய வேண்டுமோ அந்த அந்த வடிவில் இலகுவில் மக்களுக்கு செய்தி கொண்டு சேர்ப்பது இணையத்துக்கே உரிய தனித்துவம்..

இந்த தனித்துவமும இதன் மூலமான கருத்து சுதந்திரமும் கொஞ்சம் அளவுக்கதிகமாகி தறிகெட்டுப்  போய்கொண்டிருக்கின்தோ என்ற அச்சம் மேலெழுகின்றது . யார் வேண்டுமானாலும் செய்தி சொல்லலாம்.. தத்தம் கருத்துகளுக்கும் எண்ன ஓட்டங்களுக்கு ஏற்ப செய்திகளை திரித்துக் கூறலாம் என்ற  ஒரு அபாயகரமான நிலை உருவாகி வருகின்றது.