Thursday 26 September 2013

கடுப்பானார் கடவுள்....!!!


2004 ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி..  அமெரிக்காவின் Massachusetts  உயர் நீதிமன்றத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் புரியலாம் என்று சரிச்சைக்குரிய தீர்ப்பொன்று வழங்கபடுகின்றது.....  "கடவுளே உனக்கு கண்ணே இல்லையா இதெல்லாம் பார்த்துகிட்டு சும்மாவா இருக்க நீயி?" என்று செய்தி கேள்விப்பட்ட ஒரு கிழவி  மேலே பார்த்து முழங்க.....

உண்மையிலேயே அன்று கடவுள் இமயமலைப் பக்கத்தில் கொஞ்சம் பிஸி ......


என்ன நடந்துச்சுன்னா........


******************************

ஒரு பக்தனின் நீண்ட நாள் தவத்தின் பயனாக  கடவுள் அவன் முன் தோன்றினார்...

"உன் பக்தி கண்டு வியந்தோம்...  என்ன வரம் வேண்டும் கேள்?"

"வரங்கள் வேண்டி சுயநலமாய் தவம் செய்திருந்தால் நீர் என் முன் தோன்றியிருக்கவே மாட்டீர்...  எனக்கிருப்பதெல்லாம் பொதுநலம் மட்டுமே"

"அப்படியானால் என்னிடம் ஒன்றுமே நீ கேட்கபோவதில்லையா?"

"ஒன்றுமே கேட்கபோவதில்லை என்ற முடிவுடன் நான் தவமிருந்திருந்தால் அப்போதும் நீர் என்முன் தோன்றி  உமது  நேரத்தை விரயமாக்கியிருக்க மாட்டீர்..."

"சரி அப்படியானால் கேள்..."

"அதென்ன ஒருசிலரை மட்டுமே சிந்தனையாளர் என்றும் தத்துவ ஞானிகள் என்றும் வரையறுத்து வைத்திருக்கிறீர்?"

"எல்லாரும் அவரவர் பாணியில் சிந்திக்கவும் செயல்படவும்  தொடங்கினால் பூமி தாங்காது மகனே...."

"கருத்து சொல்லுவதற்கான வழிமுறைகளை கூட சிலரின் கைகளில் தான் தந்து வைத்திருக்கிறீர்... எதற்காக இந்த ஓரவஞ்சனை ?"

"எல்லாரும் கருத்து சொல்லத் தொடங்கினால் கருத்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஆயுதங்களின்றி உலகபோர் மூண்டு அணுவாயுதங்கள் இல்லாமலே அதன் தாக்கங்களால் பூமி உருக்குலைந்து விடும் மகனே...."

"ஏற்றுகொள்ளதக்கதாக இல்லையே உங்கள் பதில்கள்... எதோ உங்கள் சுயநலத்துக்காக எல்லாரையும் கட்டிபோட்டு வைத்திருப்பது போலல்லவா இருக்கிறது ? "

கடுப்பானார் கடவுள்.........

"சப்பா... முடியல.. உனக்கெல்லாம் சொன்ன புரியாது.... நீ சொல்ற மாதிரியெல்லாம் நடந்தா என்னாகும் பார்க்குறியா?
பார்க்குறியா?????
பார்க்குறியா? ????????
...
...
...
Facebook உருவாகட்டும்.....!!!!!!"











******************************

பி.கு.

Facebook 04-02-2004 அன்று உலகிற்கு அறிமுகமானது   .

பாதுகாப்பு காரணங்கள் கருதி Facebook உருவாகக் காரணமாக இருந்த அந்த பக்தனின் பெயர் விலாச விபரங்கள் எக்காரணம் கொண்டும் வெளியிடப்பட்ட மாட்டாது.

இந்தக் கற்பனைக்  கதையில் வந்த கடவுள் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல....




2 comments:

சிம்புள் said...

ரசித்தேன்

sharthaar said...

Diron Fernando எந்த மதத்தையும் சாராதிருந்தால் தான் அவர் கடவுள் !

Post a Comment