Thursday 27 October 2011

நான் நானாக.........

(மித்திரன் வாரமலரில் நான் எழுதிய "ரசிக்கலாம் வாங்க" தொடரிற்காக எழுதியது... 29-05-2005 இல் பிரசுரமானது) 

ஒரு நண்பர் இருந்தார்... அவரிடம் எனக்கு மிகப்பிடித்த விடயம் அவர் உலகை பற்றிக் கவலைப்படாதது தான். அதாவது மற்றவர்கள் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் ஒரு துளியேனும் அவரிடம் இருந்ததில்லை. தனக்கு பிடித்த விதத்தில் ஆடைகள் அணிவார். பல சமயங்களில் அது வித்தியாசமான கோணத்தில் இருக்கும். அவரைக் கடந்து போகின்றவர்கள் நிச்சயமாக ஒருதடவை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு போவார்கள். விதவிதமாய் சிகை அலங்காரம் செய்வார். வகை வகையாய் ஆபரணங்கள் அணிவார். தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அத்தனையும் செய்வார். அதற்கான விளக்கங்கள் நமக்கு புரியாது. நமக்கு புரியவைக்க அவர் முயல்வதும் கிடையாது. நினைத்ததை எல்லாம் சென்சார் இன்றிப் பேசுவார். சபையோர் எவராக எத்தரப்பினராக இருப்பினும் அவரது பேச்சு இடத்துகேற்ப மாறுவதில்லை. .....       மொத்தத்தில் அவர் அவராகவே இருந்தார்!