Tuesday 4 September 2012

மொசார்ட் வீட்டு ஆணாதிக்கம்!

செவ்விசையில் ஆர்வமுள்ளவர்களுக்கு அறிமுகம் தேவையில்லாத பெயர் மொசார்ட் (Mozart). அவரின் இசை சாதனைகள் இன்னனும் மேடைகளில் பேசப்பட்டும் இசைக்கப்பட்டும் அவரை வாழ வைத்துகொண்டிருகின்றது..

இந்த மொசார்ட் இசை கற்க ஆரம்பித்தது எப்படி என்று இவரது தந்தையார் ஒரு குறிப்பில் இப்படிச் சொல்கிறார்...' தன் சகோதரிக்கு நான் இடும் கட்டளைகளையும் அதனை ஏற்று  அவள் புரியும் இசைப் பயிற்சிகளையும் உன்னிப்பாக கவனித்து வந்த மொசார்ட்டுக்கும்  இசை அறிவு இயல்பாகவே வளர ஆரம்பித்தது"

மொசார்டுக்கே இசை அறிவு வளர தூண்டுகோலாய் இருந்த அவரின் சகோதரி என்ன ஆனார் ?


மரியா அன்னா மொசார்ட் (Maria Anna Mozart) என்பது அவரது பெயர். மொசர்டுக்கு ஐந்து வருடங்கள் மூத்தவர். தன் ஏழாம்  வயதில் தந்தையிடம் ஹர்பிசிகோட் பயில ஆரம்பித்தார். ஹர்பிசிகோட் (harpsicode)  அல்லது fortepiano என்பது கீபோர்ட் குடும்பத்தை சார்ந்த இசைக் கருவி . அதில் சிறப்புத்  தேர்ச்சி பெற்றதோடு மட்டுமின்றி இசை நுணுக்கங்களையும் நன்கு கற்றறிந்த அன்னா தன் தந்தையாரோடும்  பின்னர் தம்பியுடனும் பல இசை சுற்றுலாக்களை மேற்கொண்டு அவர்களுடன் சரிசமனான பெயர் பெற்றது வந்தவர்.

இப்படி மேதைகளுடன் சரிசமமாய் இசைத் துறையில் பிரகசித்தவரின் பெயர் இசை வரலாற்றில் காணமல் போனது அக்கால ஆணாதிக்க சமுதாயத்தினால் என்பது வருந்தத்தக்க  வரலாற்று உண்மை.

1769 இன் பின்னர்... அதாவது அவரின் 19ஆம் வயதுக்குப் பின்னர் பொது இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்ற அவருக்கு வீட்டாரினால் தடை விதிக்கப்பட்டது. திருமண வயதில் வீட்டினுள் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை அந்தகால வெள்ளையர்களிடமும்  இருந்து தான் இருக்கின்றது . 

வீட்டில் இருந்தவாறு அவர் பல இசை கோர்ப்புகளை உருவாக்கி அதனை தம்பிக்கு அனுப்பி வைத்துள்ளார். அவற்றை விமர்சித்து பாராட்டி மொசார்ட் தன் சகோதரிக்கு எழுதிய கடிதங்கள் இதற்கு சான்று. அனால் அந்த இசைக்குறிப்புகளுக்கு என்ன ஆனதென்ற விபரம் தெரியவில்லை என்று சொல்லப்படுகின்றது. 

மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் அந்த மக்களின் மனோபாவம் எப்படி இருந்தது என்பதற்கு சான்றாக இதனை எடுத்துகொள்வது சுலபம். எங்கள் சமூகம் இன்னமும் இப்படிப்பட்ட மனநிலையில் பல திறமைசாலிகளை பெண் என்னும் ஒரே காரணத்துக்காகக் கட்டிப்போட்டு வைத்திருப்பதோ ஜீரணிக்க முடியாதது. 





No comments:

Post a Comment