Thursday 19 January 2012

தகவல்கள் ஜாக்கிரதை!

ஊடகங்களில்  முதன்மையானதாக இணையம்  மாறி விட்டது.. பார்த்தல் கேட்டல் படித்தல் ஒளி ஒலி என்று என்னென வடிவங்களில் மக்களை சென்றடைய வேண்டுமோ அந்த அந்த வடிவில் இலகுவில் மக்களுக்கு செய்தி கொண்டு சேர்ப்பது இணையத்துக்கே உரிய தனித்துவம்..

இந்த தனித்துவமும இதன் மூலமான கருத்து சுதந்திரமும் கொஞ்சம் அளவுக்கதிகமாகி தறிகெட்டுப்  போய்கொண்டிருக்கின்தோ என்ற அச்சம் மேலெழுகின்றது . யார் வேண்டுமானாலும் செய்தி சொல்லலாம்.. தத்தம் கருத்துகளுக்கும் எண்ன ஓட்டங்களுக்கு ஏற்ப செய்திகளை திரித்துக் கூறலாம் என்ற  ஒரு அபாயகரமான நிலை உருவாகி வருகின்றது.


ஒரு தெருவில் நடக்கும் ஒரு விபத்தையும் கூட ஒரு இனம் இன்னொரு இனத்துக்கு எதிராக புரியும் வன்முறை என்கிற ரீதியில் திரித்துக் கூறி இனத்துவேசத்தை உண்டாகி உணர்வுபூர்வமாக்கி ரேட்டிங் ஏற்றிக் கொள்வதிலும் விளம்பரம் தேடுவதிலும் குறியாய் இருக்கும் தளங்கள் ஒரு பக்கம்.. விந்தை தகவல்கள் என்கிற பெயரில் ஆபாசபடங்களையும் தகாத உறவுச் செய்திகளையும் "வீடியோவுடன்" என்று அசிங்கப்படுத்தி வக்கிரகத்தை விற்கும் தமிழ் தளங்கள் இன்னொரு பக்கம்....எங்கே யாரவது செய்தி போடுவார்கள் என்று காத்திருந்து அதை சுடச்சுட பிரதி பண்ணி சொந்தம் கொண்டாடும் சிறுபிள்ளைத்தனமான தளங்கள் ஒருபக்கம்.. இத்தனைக்கும் நடுவில் சிக்கித் தவிக்கிறது இணையத்தில் தகவல் தேடும் கூட்டம்.



ஒரு தரமான திரைப்படத்தை மோசமாக வர்ணித்தல், ஒரு நேரிய படைப்பை எடை குறைத்து சித்தரித்தல், தனி மனித கருத்துகளுக்கு சமூகத்தின் கருத்து என்ற சாயம் பூசுதல், மனத்திற்கு தோன்றிய ஊகங்களை செய்தி என்ற பெயரில் வெளியிடுதல் என்று நீண்டுகொண்டே போகும் பட்டியல்களுடன் நடத்தப்படும் இணையத்தளங்களுக்கு ஒரு கண்டிப்புடன் கூடிய தணிக்கை அமைப்பு உருவாகினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகின்றது. இணையத்தளம் ஒன்றை உருவாகுவதற்கான கெடுபிடிகளும் அவதானிப்புகளும் இன்னும் அதிகரித்தால் கூட இந்த நிலைமை மாறலாம்.

எல்லாவற்றையும் விட தனக்கு இந்த உலகத்திற்கு சொல்ல ஒன்றும் இல்லாவிட்டால் திரித்துகூறுதல்,பொய் கூறுதல், மற்றவன் கருத்தை தனது கருத்தாய் வெளியிடல் போன்ற காரியங்களால் தன்னை வெளிப்படுத்த முனையாமல் சும்மா இருத்தல் நலம். அல்லது தன்னை உலகிற்கு வெளிப்படுத்த உருப்படியாய் ஒரு நல்ல வழியை தெரிந்துகொள்ள உத்தேசித்தல் அதை விட நலம்!!!






No comments:

Post a Comment