Sunday 11 March 2012

ஸ்ரீதர் பிச்சையப்பாவுடன் Generation Gap!

என்னை செதுக்கியவர்களில் மிக முக்கியமானவர் ஸ்ரீ அண்ணா என்று நாங்கள் அன்போடு அழைக்கும் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்கள். சில மரணங்களை மனது கடைசிவரை ஏற்றுக்கொள்ளப் போராடும். ஸ்ரீ அண்ணாவின் மரணமும் இன்னும் அப்படித்தான். அவரது இரண்டாவது நினைவு நாளும் கடந்துவிட்டது. நினைவுகள் மட்டும் இன்னும் அதே பசுமையுடன்..


இலங்கை கலை உலகைப் பொறுத்தவரையில் ஸ்ரீ அண்ணா ஒரு மிகப்பெரும் களஞ்சியம். ஒரு மேடை பாடகனாகவோ அல்லது கிறுக்குத்தனமிக்க ஒரு நகைச்சுவை நடிகனகவோ மட்டுமே பலரால் அவர் இனம்கானபட்டலும் அவரது பன்முகத் திறமை அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு நன்கு தெரியும். என் போன்ற பல இளையவர்கள் கலைத்துறையில் அவரிடம் கற்றறிந்தவை ஏராளம். இசையில், ஓவியத்தில், கவிதையில், எழுத்தில் என்று எல்லாக் கலை வடிவங்களிலும் புதிய கோணத்தில் என்னை சிந்திக்க வைத்தவர் அவர்.

அவரும் நானும் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் பற்றிய பகிர்வு இது...

என்னுடைய "Dimensions" இசை அல்பத்துக்காக ஸ்ரீ அண்ணாவை ஏதேனும் ஒரு பாடல் பாட வைக்கவேண்டுமென்ற ஆவலில் அவருக்காகவே நான் உருவாக்கிய ஒரு வித்தியாசமான கருப்பொருளுடனான பாடல் இது.

மிகுந்த ஆக்க சக்தி மிக்க அவருக்கு நான் இந்த பாடல் பற்றி சொன்ன உடனேயே "எப்ப மச்சான் ரெகார்டிங்?" என்று கேட்டார். திகதியையும் நேரத்தையும் சொன்னதும் வந்து நின்றார். வரிகளை கொடுத்தேன். மௌனமாய் வாசித்தார். சில வரிகளைக் கடக்கும் போது சத்தமாய் சிரித்தார்.. அது பாடல் வரிகளிலுள்ள நகைச்சுவைக்காகவா அல்லது இதெல்லாம் ஒரு வரியா என்ற கேலிச்சிரிப்பா என்று ஒரு சந்தேகத்துடன் அவரை பார்த்தேன்.

"நீ தான் எழுதினியா?" என்று கேட்டார்.. ஆமா என்றேன். "டேய்.. மியூசிக் பண்ற வேலைய மட்டும் நீ பாரு. அப்புறம் பாட்டு எழுதுற வேலையும் எனக்கு இல்லாம போயிரும்" என்று நக்கலாக சொன்னார்.

பாடலின் இந்த இந்த இடங்களில் இப்படி எல்லாம் பாடவா? என்று கேட்டார். உங்கள் இஷ்டம்... உங்களுக்காகத்தான் இந்த பாடல் என்று முழுச் சுதந்திரம் கொடுத்து விட்டேன். 'தேங்க்ஸ் டா.. சரி ஆரம்பிக்கலாம்" என்றார். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் பாடி முடித்து விட்டார்.

Generation Gap என்ற இந்த பாடல் ஒரு மூத்தவருக்கும் இளையவருக்குமான சம்பாஷனை போன்று எழுதப்பட்டது. குறிப்பாக ராப் இசை கலாசாரம் நம் தமிழ் இசைக்குள் புகுந்து கொஞ்சம் கொஞ்சமாக இளையவர் மத்தியில் புகழடைய ஆரம்பித்த காலகட்டத்தில் உருவானது இந்தப் பாடல்.. ராப் இசை வடிவத்தால் எரிச்சல் அடைந்த ஒரு பெரியவரின் புலம்பல் அதற்கு இளையவர்கள் சொல்லும் பதில்கள் என்று ஹாஸ்யம் கலந்து எழுதப்பட்டது.

பாடலை நான் எழுதி இசையமைக்க ஸ்ரீதர் அண்ணாவோடு மனோஜ் பாடியிருந்தார். அவர்களோடு கீர்த்திகா மற்றும் சகானாவும் குரல் கொடுத்திருந்தார்கள்.

பாடல் வெளிவந்த புதிதில் "நம்ம ஹிட்ஸ்" என்று பாடலை அடிக்கடி ஒலிபரப்பிய சக்தி FM மற்றும் சூரியன் FM  வானொலிகளுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

"யாருக்கு இந்த பாட்டுல இவ்ளோ ஏசி எழுதிருக்கீங்க?" என்று வானொலியில் பாடல் கேட்டவர்கள் என்னிடம் கேட்டார்கள். மூத்தவர்களிடம் அவ்வப்போது நாங்கள் வாங்கிக் கட்டிக் கொள்பவை தான் இவை என்பதை விளங்கப்படுதினேன்...

பாட்ட கேட்டா உங்களுக்கும் புரியும் நம்ம கஷ்டம் :) கேட்டு பாருங்க....


_________________________
I added cool smileys to this message... if you don't see them go to: http://s.exps.me

5 comments:

Satheeskanth Lyricist said...

GREAT TEAM WORK BRO :-)

Anonymous said...

nice lyrics...and its really true...

அன்பு நண்பன் said...

anna nice post...

தனிமரம் said...

சிறிதர் ஞாபக மீட்டல் அருமை

montreal rhythm said...

nice thambi.

Post a Comment