Wednesday 29 June 2011

ஒரு அஞ்சலி.... சில பாடங்கள்...

பிரபலம் என்னும் சொல்லுக்கு மிகச்சிறந்த உதாரணம் மைகேல் ஜாக்சன் என்னும் பெயர் தான்.. உலகம் முழுக்க எத்தனையோ கலைஞர்கள் வந்து போனால் கூட பட்டி தொட்டியெல்லாம் தெரிந்த ஒரே பெயர் இந்த மைகேல் ஜாக்சன். அவரது பாடலை கேட்காத அவரது நடனத்தை பார்த்திராத பல்லுப்போன ஒரு பாட்டிக்கு கூட அவரின் பெயர் நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படியானதொரு பிரபலம் வேறு யாருக்கு இருக்கின்றது?

கலைஞர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  பதிவு செய்யப்பட அவர்களின் படைப்புகள் இறவாத்தன்மை பெற்றுவிடுகின்றன. மலேசியா வாசுதேவன் இன்னும் பாடிகொண்டிருகின்றார்....கவிஞர் கண்ணதாசன் இன்னமும் கருடா சௌக்கியமா என்று நலம் விசாரித்துக் கொண்டிருக்கின்றார்.... மொத்தத்தில் நல்ல கலைஞருக்கு சாவில்லை..


அனால் இங்கே சில கலைஞர்கள் வாழும் போதே நம்மை சாகடித்துகொண்டிருகும் கொடுமையும் நடந்துகொண்டிருகின்றது அவ்வப்போது..... வெறும் புகழாசைக்காக கட்டாயக் கலைஞரானவர்கள் பலர் இன்று மக்களின் ரசனைக்குள் தம்மை பலவந்தமாக புகுத்த முனைந்துகொண்டிருப்பது தண்டனை கொடுக்க வேண்டிய குற்றமாக்கப்பட வேண்டிய ஒன்று.

சில திறமையான கலைஞர்கள் கூட புகழ் மயக்கத்தில் தம் படைப்புகளுக்கு கிடைக்கும் பாராட்டுகள் பற்றியும் அங்கீகாரம் பற்றியும் அளவுக்கதிகமாகப் பேசி மக்களை எரிச்சல் மூட்டிக்கொண்டிருப்பதும் கவலைக்குரிய விடயமே....

தன் படைப்பின் மீது நம்பிக்கையற்ற கலைஞனுக்கே அவனுக்குக் கிடைக்கும் பாராட்டுகள் எல்லாம் பெரிதாக தோன்றும். அதை மிகைப்படுத்தி பேசிகொண்டிருபதால் அடுத்த படைப்பு தாமதமாகி தரமிழந்து போவது மட்டும் தான் மிச்சம். தன் படைப்பை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணி மட்டுமே கலைஞனுடையது. அது தரமானதாயின் அதற்குரிய அங்கீகாரம் தானாக வந்து சேரும். அதை விடுத்து தமக்கு தாமே பட்டங்கள் சூடிக்கொண்டு.... திரைக்குப் பின்னல் அரசியல் புரிந்து வலுக்கட்டாயமாக விருதுகளை வாங்கிக் குவிப்பது, மிகைப்படுத்தி தம்மைப்பற்றி பேசிக்கொள்வது...இப்படியெல்லாம் பண்ணிவிட்டு நிம்மதியாக தூங்க முடிகின்றதென்றால் அவனுடைய படைப்பு காலத்தை வெல்வது கடினம் தான்...

உண்மையான திறமைகளுக்கும் படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் மக்கள் கொடுக்கும் உணர்வுபூர்வமான அங்கீகாரத்துக்கு கீழுள்ள படங்களே சான்று.....























1 comment:

Shaifa Begum said...

நல்லதொரு விடயத்தை மிகச் சரியான முறையில் சொல்லியிருக்கிறீர்கள்.. என்னையும் போட்டு உருட்டிக் கொண்டிருந்த விடயம் மிக லாவகமாக கையாளப்பட்டு எழுத்தில் தட்டப்பட்டதில் மகிழ்ச்சியே. நீங்கள் சொன்ன மாதிரி கலைஞர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே..அவர்களின் படைப்பபுக்கள்.. இறவாத்தன்மை கொண்ட காலத்தால் அழியாதவைகளே.கேட்டுப் பெறும் பாராட்டுக்களும், சந்துல சிந்து பாடி பெறும் விருதுகளும் நிலையானவை அல்ல.. கலைஞனுக்கான அங்கீகாரம் நீங்கள் சொன்னது மாதிரி தானாகக் கலைஞனை தேடி வரவேண்டும்..அது கேட்டுப் பெறும் ஒன்றல்ல.மகத்தான அந்த விடயத்தைக் கொச்சைப்படுத்துவது விரும்பத்தகாத ஒன்றே என்றே நான் சொல்வேன்.

”இங்கே சில கலைஞர்கள் வாழும் போதே நம்மை சாகடித்துகொண்டிருகும் கொடுமையும் நடந்துகொண்டிருகின்றது அவ்வப்போது..... வெறும் புகழாசைக்காக கட்டாயக் கலைஞரானவர்கள் பலர் இன்று மக்களின் ரசனைக்குள் தம்மை பலவந்தமாக புகுத்த முனைந்துகொண்டிருப்பது தண்டனை கொடுக்க வேண்டிய குற்றமாக்கப்பட வேண்டிய ஒன்று.”

உங்கள் வேதனை புரிகிறது. இதில் மாற்றுக் கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. கண்டிப்பாக
தண்டனை கொடுக்க வேண்டிய குற்றமாக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் நானும் உடன் படுகிறேன்...

உங்கள் எழுத்துக்களுக்கு ஒரு சபாஸ் போட்டுக் கொள்ளலாம்.. வாழ்த்துக்கள் .. எழுத்தக்களோடும் தொடர்ந்து கொள்ளுங்கள்..

Post a Comment