Wednesday 27 April 2011

கூவி விற்கவும் தெரியணும்



"நீங்கள் உற்பத்தி செய்பவற்றை நீங்களே விற்பனை செய்ய முடிந்தாலன்றி தற்கால நவீன வியாபார உலகத்தில் தனித்தன்மையுள்ள சிந்தனையாளராக  இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை" -டேவிட் .எம். ஓகில்வி 


இன்றுவரை எங்கள் படைப்புகளுக்கு களமில்லை, நல்ல காலமுமில்லை, விலை போகுதுமில்லை என்று குறை பட்டுக்கொள்ளும் நிறைய கலைஞர்களைப்  பார்கின்றேன். ஊடகங்களில் எமது படைப்புகள் ஒலிபரப்ப படுவதுமில்லை என்பது இன்னுமொரு பிரபலமான குற்றச்சாட்டு.

பல நேர்காணல்களில் இது பற்றி நான் கதைத்ததுண்டு.  சக கலைஞர்கள் மனம் நொந்து போடும் status message களுக்கு  நான் கமெண்ட் ஆகவும்  பதிந்த்துண்டு.

உங்கள் படைப்பை நீங்களே வீட்டிலிருந்து கூவி கூவி விற்றல் தான் இசையின் எதிகால சந்தைபடுத்தல் வழிமுறை என்பது கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாகி வருகின்றது. 

இலத்திரனியல் ஊடகங்களை விட இணையத்தளம் உங்களுக்கு நிறையவே கைகொடுக்க காத்திருக்கின்றது. சரியான வழியில் சென்றால் உங்கள் இலக்கை நீங்கள் நிச்சயம் அடையலாம் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக நானும் உணர்ந்து வருகின்றேன்.  ஆரம்பத்தில் இதற்கு ஆங்கிலம் ஒரு தடையாக இருந்தது பலருக்கு. இன்று அதுவும் இல்லை... உங்களுக்கு தெரிந்த தமிழில் தமிழ் பேசும் ரசிகர்களிடையே உங்கள் படைப்பை எந்தவித சிரமங்களுமின்றி கொண்டு சேர்க்கும் காலத்தில் நாம் இருப்பது நம் அதிர்ஷ்டம் . 

Digital Distribution என்னும் இணையதள இசை வியாபாரமே இன்றைக்கு பல மேற்கத்திய உலகப்புகழ் கலைஞர்களின் விற்பனை வழிமுறையாக இருக்கின்றது. தமது படைப்புக்களை இடைத்தரகர்கள் இன்றி தாமே நேரடியாக விற்பனை செய்துகொள்ளும் இம்முறை மூலம் ஒற்றை பாடலொன்றை தயாரித்து அதன் மூலம் ஒரு ஆல்பம் தரும் வருமானத்தை விட அதிகம் பணமீடுகின்றார்கள். 

Digital Distribution  பற்றியும் அது சம்பந்தமான பயன்தரும் தளங்கள் பற்றியும் அடுத்து வரும் பதிவுகளில்  தருகின்றேன்.. என் மூத்த கலைஞர்களுக்கும் அவை உதவி புரியும் என்று நம்புகின்றேன்.  





1 comment:

Unknown said...

உங்கள் பதிவுகள் மேலும் சிறக்கட்டும்

Post a Comment