Wednesday 20 April 2011

இசையமைக்கும் தொழிலில் பெண்கள் ??


இசையமைப்பாளராக பெண் ஒருவரை காண்பது மிக அரிதான விடயமாகவே இருப்பதன் ரகசியம் என்னவென்று புரியவில்லை. ஒருவரும் இல்லையென்றும் சொல்லிவிட முடியா அதே வேளை, பிரகாசிக்கும் வெற்றிகரமான பெண் இசையமைப்பாளர் ஒருவருமே இல்லை என்பதை கொஞ்சம் திடமாக சொல்லிக்கொள்ள முடியும் என்று நினைக்கின்றேன்.

"Why No Great Women Composers?" என்பது 1940 இல் உளவியலாளர் கார்ல்.எ.செஷோர் எழுதிய புத்தகம். சாதிப்பதை விட சாதிப்பதற்கு ஆண்களுக்கு துணை போதலே பெண்களுக்கு மன மகிழ்ச்சி தருகிறது என்னும் பொதுவான ஒரு உளவியல் காரணமே மற்ற துறைகளை போல இசையமைததலில் பெண்கள் ஆர்வம் காட்டாமைக்கு காரணம் என்று அவர் குறிப்பிடுகின்றார். அவரது காலத்துக்கு அது ஒரு வேளை சரியான ஒரு கூற்றாக இருக்கலாம். அனால் இன்றைய கால கட்டத்தில் இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத கருத்து என்பதற்கு நான் விளக்கம் சொல்ல தேவையே இல்லை.

பாடுதல், இசை மீட்டுதல், பாடல் எழுதுதல் போன்ற இசை சார் துறைகளில் ஆர்வம் காடும் பெண்கள் எண்ணிலடங்காதோராய் இருக்கும் போது இசையமைத்தல் மட்டும் அவர்களுக்கு அந்நியமாய் போன ரகசியம் என்ன என்பதற்கு காரணங்கள்  புரியவில்லை. 

கீர்த்தனைகளோ சிம்பொனிகளோ கூட பெண்களால் இசையமைக்கப்பட்டது என்று சொல்லும் வரலாறு ஒன்றையும் காணக்கிடைக்கவில்லை.  நமக்கு மிகவும் பரிச்சயமான தமிழ் சினிமா இசைத்துறையிலும் கூட ஓரிருவர் தவிர பெண் இசையமைப்பாளர்கள் பரவலாக இல்லை. ரெஹானா மற்றும் பவதாரிணி ஆகியோர் இசையமைத்த போதும் அவை ஜனரஞ்சக வெற்றி பெறவில்லை தவிரவும் அவர்கள் அப்பணியை தொடரவும் இல்லை. 

நம் நாட்டை பொறுத்தவரை சிங்கள  இசை துறையிலும் சரி தமிழ் இசை துறையிலும் சரி பெண் இசையமைப்பாளர் என்று ஒருவரும் இல்லை என்று தான் நினைகிறேன். 

எண்ணத்தில் தோன்றிய கேள்வி இது... ஏன் இல்லை இதோ இருக்கிறோம் என்று புதியாய் யாரும் வெளிவந்தால் சந்தோசம்.... அல்லது ஏன் இல்லை இதோ இத்தனை பேர் இருந்திருக்கின்றர்கள் என்று உங்களுக்கு தெரிந்த பெண் இசையமைபாளர்களை பற்றி உலகிற்கு சொன்னாலும் நல்லதே!




4 comments:

ராஜ்குமார் said...

வலைப்பதிவ உலகிலும் ஒரு அலசு அலசப் போறிங்க போல.......

வாழ்த்துக்கள் இலங்கையின் இசைஞானி அவர்களே....

Anonymous said...

hat's off to you Diron anna...

//பாடுதல், இசை மீட்டுதல், பாடல் எழுதுதல் போன்ற இசை சார் துறைகளில் ஆர்வம் காடும் பெண்கள் எண்ணிலடங்காதோராய் இருக்கும் போது இசையமைத்தல் மட்டும் அவர்களுக்கு அந்நியமாய் போன ரகசியம் என்ன என்பதற்கு காரணங்கள் புரியவில்லை. //

இதில் அன்னியதன்மைக்கு காரணங்கள் பிறிதொன்றும் இல்லை.. உயிர்களின் உருவாக்க சிற்பிகளாய் பெண்கள் இருந்திட்ட போதும், அதன் மூலமும் , ஆதரமுமாக அவர்களுள் கலந்தவர்கள் ஆடவர்களே... பல நல்ல உருவாக்கங்களுக்கு உரு கொடுக்கும் திறன் பெண்களிடம் உள்ள போதும் அவர்கள் இன்னமும் அதனை உணராமல் இருப்பதுவும் வேதனையே... ஒரு சிறந்த கலைஞரின்
ஆக்கபூர்வ பதிவுக்கு என் தலை வணக்கங்கள் ............

Unknown said...

உங்கள் பணனுள்ள பதிவுக்கு எம் தலை வணக்கங்கள்...... மேலும் இவ்வாறான வித்தியாசமான சிந்தனைகள் ஊற்றெடுக்கட்டும்....

வாழ்க இசையமைப்பாளர் டிரோன் அவர்களே....

மெய்ப்பொருள் கண்டு சொல்வோம்....
விரைவில்...........

சின்னப்பயல் said...

யாரும் இதுவரை யோசிக்காதது...:-)

Post a Comment