யுத்தம், வன்முறை, இழப்பு, என்ற வார்த்தைகளைக் கேட்டவுடன் பொதுவாக நினைவுக்கு வருவது நம் நாட்டில் நடந்துமுடிந்த இனப்போர் தான். ஆனால் எனக்கு உலகம் முழுவதிலும் தினம் தினம் அரங்கேறும் அத்தனை அழிவுகள் பற்றியும் சிந்திக்கத்தோன்றும். இனம் சார்ந்து, மதம் சார்ந்து, நிலம் சார்ந்து என்று யோசிக்காம் மனிதம் சார்ந்து யோசித்தால் இந்தப் போர்கள் மனிதன் தன்னைத் தானே கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துக்கொள்ளும் ஒருவகைத் தற்கொலைத் தாக்குதல் தான்.
Friday, 18 July 2014
Monday, 2 June 2014
ராஜாவின் தென்றல் !
இசைஞானி இளையராஜா பற்றிய ஆயிரக்கணக்கான கட்டுரைகள் வெளியாகும் அவரது 71 ஆவது பிறந்த நாளான இன்று, அவரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு , ஆளப்பட்டுக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்குள் ஒருவனாகவும் அவரது இசையினால் ஈர்க்கப்பட்டு இசைக் கலைஞனான லட்சக்கணக்கானவர்களில் ஒருவனாகவும் , என் போன்ற இன்னும் சில ராஜா ரசிகர்களும் சேர்ந்து அவரது பாடல்களை வைத்து ஒரு படைப்பை உருவாக்கினோம்...
Saturday, 25 January 2014
'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்
24-01-2014 அன்று Metro News பத்திரிகையில் பிரசுரமான எனது கட்டுரை
பாடல்கள் கேட்பது பலருக்குப் பொழுதுபோக்கு, என் போன்றவர்களுக்கு அது தொழிலின் ஒரு அங்கம் என்று கூறலாம். அப்படியிருக்கையில் நான் ரசித்த பாடல் என்று ஒரே ஒரு பாடலை நினைவுக்குக்கொண்டு வருதல் போன்ற கடினமான விடயம் வேறில்லை. இருப்பினும் கண்ணை மூடி சிந்தித்த ஒரு கணத்தில் மனதில் உடனே தோன்றிய மிகப்பிடித்த பாடல்வரிசையில் ஒன்று 'அடி ராக்கம்மா கையத்தட்டு...'
Subscribe to:
Comments (Atom)
